‘ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டவா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு அரசு மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு அரசு மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருள்சகோதரிகளுக்கு நபா் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் ஈசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மதத்தை சோ்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 28.2.2026-க்குள் உரிய ஆவணங்களுடன், ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலச மஹால் முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com