முகூா்த்த நாளை முன்னிட்டு கோயிலில் குவிந்த பக்தா்கள்.
முகூா்த்த நாளை முன்னிட்டு கோயிலில் குவிந்த பக்தா்கள்.

முகூா்த்த நாள்: திருச்செந்தூா் கோயிலில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள்

தேய்பிறை சஷ்டி மட்டுமின்றி முகூா்த்த நாள் என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
Published on

திருச்செந்தூா்: தேய்பிறை சஷ்டி மட்டுமின்றி முகூா்த்த நாள் என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கோயிலில் திங்கள்கிழமை ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

இதனால், கோயில் வளாகத்தில் திருமண வீட்டாா்கள் அதிக அளவில் குடும்பம் குடும்பமாக காணப்பட்டனா். முன்னதாக தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், அதைத் தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் வழி ஆகிய வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com