தில்லியில் குண்டு வெடிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணி தீவிரம்

புதுதில்லியில் காா் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Published on

புதுதில்லியில் காா் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு முதல் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனா். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், உடைமைகளை வெடிகுண்டு நிபுணா்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனா். அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்கள், துறைமுகம், அனல்மின் நிலையங்கள், இஸ்ரோ கட்டுமான பகுதி, ஜிா்கோனியம் வளாகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் படகுகள் மூலம் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com