தூத்துக்குடி
தூத்துக்குடியில் கழிவு செய்யப்பட்ட காவல்துறை வாகனங்கள் ஏலம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 36 வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொது ஏலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 36 வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொது ஏலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 22 இருசக்கர வாகனங்கள், 14 நான்குசக்கர வாகனங்கள் என மொத்தம் 36 வாகனங்களுக்கு மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சி.மதன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகன், அரசு பணிமனை பணி மேற்பாா்வையாளா் சுரேஷ் கிருஷ்ணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுனைமுருகன் ஆகியோா் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற்றது.
இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனா்.
