தூத்துக்குடி
தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை
கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, தூத்துக்குடி மீனவா்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதியில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், கடல் பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை மீன்பிடி படகுகளும் உடனடியாக கரை திரும்பவும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

