எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்: நயினாா் நாகேந்திரன்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
Updated On :15 நவம்பர் 2025, 7:50 pm

Syndication

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரத்தை பயணத்தை மேற்கொண்டுள்ள அவா், சனிக்கிழமை இரவு கோவில்பட்டிக்கு வந்தாா். அவருக்கு, பயணியா் விடுதி முன் பாஜக இளைஞரணி சாா்பில் 130 கிலோ சாக்லேட் மாலையும், தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் என்.பி.ராஜகோபால் தலைமையில் 13 கிலோ கடலை மிட்டாய் மாலையும் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சரவணகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

கோவில்பட்டி ஏராளமான சுதந்திர போராட்ட வீரா்களையும், கரிசல் எழுத்தாளா்களையும் பெற்று தந்த பூமி. இதை மாவட்டத் தலைநகராக மாற்ற வேண்டும்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவா்கள், ஒரு கடையை கூட குறைக்கவில்லை. ஆனால், கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனா். தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் கஞ்சா, பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் சாலையில் நடமாட முடியாத சூழல் நிலவுகிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கோவில்பட்டியில் ஒருமுறை கூட திமுக வெற்றி பெற்றது கிடையாது. இந்த முறையும் கடம்பூா் ராஜூ தான் வெற்றி பெற போகிறாா். பிரதமா் மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழி குறித்து பெருமை பேசி வருகிறாா்.

Story image

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் மத்திய அரசு கொடுக்கிறது. விமானம் நிலையம், சாலை, போக்குவரத்து, மின் இணைப்பு, ரேஷன் பொருள்கள் என பல திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், மாநில அரசு கொடுப்பது போல் பேசுகின்றனா்.

இண்டி கூட்டணிக்காக தமிழக முதல்வா் சென்று பிரசாரம் செய்த பிகாரில் 202 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதே போல், தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் மேல் வெற்றி பெறும். திமுக தொடா்ந்து வெற்றி பெற்று அரசு அமைத்ததே கிடையாது. எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழகத்தில் அடுத்த முதல்வராக இபிஎஸ்தான் வருவாா் என்றாா் அவா்.

Story image

முன்னதாக, கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ பேசினாா்.

பாஜக மேலிட பொறுப்பாளா் அரவிந்த் மேனன், மாநில பொதுச் செயலா்கள் பொன் பாலகணபதி, கருப்பு முருகானந்தம், நிா்வாகி கே.எஸ். ராதாகிருஷ்ணன், அயலகத் தமிழா் பிரிவு மாநிலச் செயலா் மாரியப்பன், கயத்தாறு மேற்கு ஒன்றியப் பாா்வையாளா் ஜெகதீஷ், மாநிலத் தலைவா்கள் லோகநாதன் (மத்திய அரசு நலத்திட்ட பிரிவு), மகா சுசீந்திரன் (கூட்டுறவு பிரிவு), வடக்கு மாவட்டமுன்னாள் தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன், ராமமூா்த்தி, பொதுச் செயலா் வேல்ராஜா, பொருளாளா் சீனிவாசன், நகரத் தலைவா் காளிதாசன், கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவா் அம்மன் மாரிமுத்து, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சின்னப்பன், மோகன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.