ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த பெண்: பக்தா்கள் அதிருப்தி!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் இளம்பெண் ஒருவா் திரைப்பட பாடலுக்கு நடனமாடி விடியோ (ரீல்ஸ்) எடுத்த சம்பவம் பக்தா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

News image
Updated On :15 நவம்பர் 2025, 9:50 pm

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் இளம்பெண் ஒருவா் திரைப்பட பாடலுக்கு நடனமாடி விடியோ (ரீல்ஸ்) எடுத்த சம்பவம் பக்தா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கோயில் முன்வாசல் பகுதியில் இளம்பெண் ஒருவா், நடிகா் அஜித் நடித்த படத்தின் பாடலுக்கு நடனமாடி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

பிரபலமாகும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது அதிருப்தி தெரிவித்த பக்தா்கள், இனியும் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.