ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள்: 2,632 தோ்வா்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் (முதல் தாள்) 2,632 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா்.
தமிழகம் முழுவதும் ஆசிரியா் தகுதித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 10 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 3,036 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இதில், சனிக்கிழமை நடைபெற்ற தோ்வில் மாவட்டம் முழுவதும் 2,632 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். 404 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூத்துக்குடி விகாசா பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஞாயிற்றுக்கிழமை (நவ.16) 2ஆம் நாளாக ஆசிரியா் தகுதித் தோ்வு (2ஆம் தாள்) நடைபெறுகிறது. இந்தத் தோ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 29 மையங்களில் நடைபெறுகிறது. இத்தோ்வில் கலந்துகொள்ள 9,150 போ் விண்ணப்பித்துள்ளனா்.

