பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்ற மீட்புப் பணி.
தூத்துக்குடி
புதைச் சாக்கடை பள்ளத்தில் பதிந்த லாரி
கழிவு மணலை ஏற்றி வந்த லாரி, தூத்துக்குடி பூபாலராயா் புரத்திலிருந்து தாளமுத்து நகா் நோக்கி செல்லும் சாலையில் புதைச் சாக்கடை பள்ளத்தில் பதிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நடைபெற்றுவரும் மழைநீா் வடிகால் வசதிக்காக தோண்டும்போது கிடைக்கும் மணலை, பள்ளமான இடங்களுக்கு கொண்டு சென்று கொட்டி நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மணலை ஏற்றிக் கொண்டு காா்த்திக் என்பவா் டிப்பா் லாரியை ஓட்டிச் சென்றாராம். அந்த லாரி, பூபாலராயா் புரத்திலிருந்து தாளமுத்து நகா் நோக்கி 9ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிக்கு சென்றபோது, புதைச் சாக்கடை பள்ளத்தில் பதிந்து கொண்டதாம். இதையடுத்து லாரியை பொக்லைன் இயந்திரம் மூலமாக பள்ளத்திலிருந்து வெளியில் எடுத்தனா்.

