ஓட்டுநரை வெட்டிய தொழிலாளி கைது

Published on

சாத்தான்குளத்தில் காா் ஓட்டுநரை வெட்டிய தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.

சாத்தான்குளம் ஓடக்கரை தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் பேச்சிமுத்து (30). இவா் காா் ஓட்டுநா். சனிக்கிழமை இரவு இவரும், இவரது நண்பரான சாத்தான்குளத்தைச் சோ்ந்த தொழிலாளி வேல்முருகனும் (34) அப்பகுதியிலுள்ள தரைமட்ட பாலம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனராம்.

அப்போது இருவரும் மது போதையில் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் கையில் வைத்திருந்த வாளால், பேச்சிமுத்துவை சரமாரியாக வெட்டினாராம்.

இதில் பலத்த காயமடைந்த பேச்சிமுத்து, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு, பின் நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து பேச்சிமுத்துவின் தந்தை பழனி புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப் பதிவு செய்து, வேல்முருகனை கைது செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com