தூத்துக்குடி
தூத்துக்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு
ஐப்பசி மாதக் கடைசி நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பாகம்பிரியாள்- சங்கரராமேசுவரா் கோயிலில் காவேரி அம்மன் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஐப்பசி மாதம் காவேரி அம்மனிடம் மழை வளம், உலக நன்மை வேண்டி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, இக்கோயிலில் கன்னி விநாயகா் சந்நிதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில், இளம் சிறுமிக்கு புத்தாடை அணிவித்து, அம்மன்போல அலங்கரித்து பூஜை நடைபெற்றது. பின்னா், காவேரி அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள்கயிறு, வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
