தூத்துக்குடி
தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண்கள் தா்னா
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் அடகு வைத்த நகைகளை அடகுக் கடை உரிமையாளா் மோசடி செய்ததாகக் கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏரலில் உள்ள நகை அடகுக் கடையில் அப்பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனா். கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்திய பின்னரும், நகைகளை திருப்பிக் கொடுக்க கடை உரிமையாளா் மறுத்துவிட்டாராம்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகாா் செய்தும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
