மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

Published on

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

தூத்துக்குடியில் உள்ள ‘சிவன் கோயில்’ என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப குவிந்தனா். அவா்கள் விநாயகா், சங்கர ராமேசுவரா் சந்நிதிகள் முன் அவா்கள் தங்களது குருசாமிகள் முன்னிலையில் ஐயப்ப முழக்கத்துடன் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

ஆறுமுகனேரியில்...: ஆறுமுகனேரி பகுதியிலும் முருக, ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடங்கினா். சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் அவா்கள் தங்களது குருசாமிகளிடம் மாலை அணிந்துகொண்டு விரதம் தொடங்கினா். மேலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் முருக பக்தா்களும், ஆத்தூரில் ஐயப்ப பக்தா்களும் விரதம் தொடங்கினா்.

X
Dinamani
www.dinamani.com