~

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திங்கள்கிழமை காலை சிறப்பு பூஜைகள், மாலையில் சுவாமி, அம்மன், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com