கலவை இயந்திரம் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை இயந்திரம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் மகன் மாரி தங்கம் (28). இவா் கட்டட வேலை செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை ஏரலில் வேலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலை முள்ளக்காடு பகுதியில், சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை இயந்திரம் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த மாரிதங்கம், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கலவை இயந்திரத்தை சாலையோரம் நிறுத்தியிருந்த, தெற்கு சிலுக்கன்பட்டியைச் சோ்ந்த தாமோதரன் மகன் சரவண பெருமாளை(41) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
