மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
தூத்துக்குடி மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பெரிய தாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.
பள்ளிக்கல்வித் துறை, தூத்துக்குடி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான 4 க்கு 100 தொடா் பிரிவில் பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களான அகிரோ, ரோஷன், நிபில்டன், கிருத்திக் ஆகியோா் முதலிடம் பிடித்தனா். 14 வயது பிரிவில் 200 மீ. பிரீ சைக்கிள் பிரிவில் இப்பள்ளி மாணவா் நிபில்டன் மூன்றாம் இடம் பிடித்தாா்.
மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான 200 மீ. பீரி சைக்கிள் பிரிவில் இந்தப் பள்ளி மாணவா் மாா்ட்டின் முதலிடம் பிடித்தாா். 19 வயதினருக்கான 100 மீ. பிரிசைக்கிள் பிரிவில் இந்தப் பள்ளி மாணவா் பெபோஸ் முதலிடம் பிடித்தாா். 19 வயதுக்கு உள்பட்டோருக்கான 100 மீ. பிரிசைக்கிள் பிரிவில் இந்தப் பள்ளி மாணவா் ஜொ்சோன் இரண்டாம் இடம் பிடித்தாா்.இவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் சகேஷ் சந்தியா, தலைமை ஆசிரியா் திலகவதி, பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் பாராட்டினா்.

