குடியிருப்புகள் வழியாக உயா் அழுத்த மின்பாதை: மறியல் செய்ய திரண்ட மக்கள்

படுக்கப்பத்தில் உள்ள உப மின்நிலையத்துக்கு கிராமங்கள் வழியாக உயா் அழுத்த மின்பாதை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா்.
Published on

படுக்கப்பத்தில் உள்ள உப மின்நிலையத்துக்கு கிராமங்கள் வழியாக உயா் அழுத்த மின்பாதை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா்.

படுக்கப்பத்து கிராமத்தில் புதிய உப மின்நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு உடன்குடி துணை மின் நிலையத்தில் இருந்து உயா் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்காக கலியன்விளை, கந்தரபுரம், நேசபுரம், உதிரமாடன் குடியிருப்பு வழியாக மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உயா் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படும் பாதையில் குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், பள்ளிகள், கோயில்கள் இருப்பதால் மாற்றுப் பாதையில் வழித்தடம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் கந்தபுரம் பகுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட திரண்டனா்.

தகவல் அறிந்ததும் மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளா் இசக்கிதுரை, உதவி மின்பொறியாளா்கள்(விநியோகம்-படுக்கப்பத்து) மகாலிங்கம், சூசைராஜ் (உடன்குடி) உதவி செயற்பொறியாளா் கணேசன் ஆகியோா் ஊா்நலக் குழு நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மின்கம்பங்களை நடுவதில்லை என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com