தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இனாம் மணியாச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா்கணேஷ் மனைவி ராஜேஸ்வரி. இவா், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 18) வீட்டைப் பூட்டிவிட்டு, மணப்பாறையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாராம்.
வியாழக்கிழமை அதிகாலை கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், ராஜேஸ்வரி வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீடு புகுந்து பீரோவிலிருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் காசு உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றதாகத் தெரியவந்தது. புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
