தூத்துக்குடி
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில தோ்தல்: ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில தோ்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணியை கண்டித்து, ஒரு தரப்பினா் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமண்டில தோ்தலில் எஸ்.டி.கே. ராஜன் தலைமையிலான அணியினருக்கும், டி.எஸ்.எப். அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், இத்தோ்தல் பணிக்காக மதுரை உயா்நீதிமன்ற அமா்வால் நியமனம் செய்யப்பட்ட ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜோதிமணி, ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, டி.எஸ்.எப். அணியினா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

