தூத்துக்குடியில் 58ஆவது தேசிய நூலக வார விழா

தூத்துக்குடியில் 58ஆவது தேசிய நூலக வார விழா

விழாவில் பேசினாா் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம.பேச்சியம்மாள்.
Published on

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம் சாா்பில், 58ஆவது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் மா.ராம்சங்கா் வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளா் பொ.வெங்கடாசலம், மாவட்ட நூலக அலுவலக இளநிலை உதவியாளா் சாய்சதீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்உதவி இயக்குநா் ம.பேச்சியம்மாள் கலந்துகொண்டு, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற தலைப்பில் பேசினாா். நூலகா் உ.விஜயலெட்சுமி நன்றி கூறினாா். விழாவில், போட்டித் தோ்வு எழுதும் மாணவா், மாணவிகள் திரளாக கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com