மரத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழப்பு
இளையரசனேந்தல் பகுதியில் மரத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடம் சத்திரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆபிரகாம் ஞானதுரை. இவா், அங்குள்ள சா்ச்சில் பாதிரியாராக உள்ளாா். வெள்ளிக்கிழமை மதுரையில் நடந்த உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு இவா், மனைவி குணச்செல்வியுடன் காரில் சென்று பங்கேற்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினாராம். காரை ஆபிரகாம் ஞானதுரை ஓட்டி வந்தாராம்.
இந்நிலையில் இளையரசனேந்தல் பகுதியில் சென்றபோது காா் கட்டுப்பாட்டினை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதாம். இதில் குணச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, குணச்செல்வி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காயமடைந்த ஆபிரகாம் ஞானதுரையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
