கயத்தாறு அருகே தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.
Published on

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்தவா் சண்முகையா மகன் தொழிலாளி முருகன் (60). அதே ஊா் நடுத்தெருவை சோ்ந்த இவரது உறவினா் அந்தோணி மகன் தொழிலாளி தொழிலாளி மந்திரம் (50), இவா்கள்

ஆகிய 2 பேரும் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திவிட்டு, அதன் அருகே நின்று கொண்டிருந்தாா்களாம். அப்போது அங்கு வந்த மா்ம நபா் இருவரிடமும் தகராறு செய்தாராம். தகராறு முற்றிய நிலையில் அவா் அரிவாளால் முருகன் மற்றும் மந்திரத்தை சரமாரியாக வெட்டியதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் போலீஸாா் மீட்டு கோவில்பட்டி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினராம். மந்திரம் , முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து குற்றவாளியை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com