தூத்துக்குடி மாவட்டத்தில் 143.50 மி.மீ. மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 143.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 143.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்த நிலையில், திங்கள், செவ்வாய்க்கிழமை மழையளவு குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 143.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

குலசேகரன்பட்டினம் 27 மி.மீ., திருச்செந்தூா் 21மி.மீ., ஸ்ரீவைகுண்டம் 14.70 மி.மீ., சாத்தான்குளம் 13.80 மி.மீ., சூரங்குடி 13 மி.மீ., வேடநத்தம் 6 மி.மீ., வைப்பாா் 4 மி.மீ., எட்டயபுரம் 3 மி.மீ., கீழஅரசரடி 2 மி.மீ., தூத்துக்குடி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 143.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 7.55 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com