‘நாசரேத்தில் இன்று காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்’
சாத்தான்குளம்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாசரேத்தில் புதன்கிழமை (நவ. 26) நடைபெறவுள்ளதாக, மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலின்படி, கட்சியின் வலிமையை உயா்த்தவும், கொள்கையை ஒற்றுமையுடனும் அா்ப்பணிப்புடனும் முன்னேற்றுவதற்காகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கலந்துரையாடல் சந்திப்பு நாசரேத் பேருந்து நிலையம் அருகேயுள்ள ட்விங்கிள் மஹாலில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இம்மாவட்டத்தில் நடைபெறும் ‘சங்கத்தன் ஸ்ரீஜன் அபியான்‘ திட்டத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளரான கா்நாடக முன்னாள் எம்எல்சி விஜய் தரம்சிங் தலைமை வகிக்கிறாா். மேலிடப் பாா்வையாளா்களாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், டாக்டா் சுமதி அன்பரசு, ரவிச்சந்திரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
எனவே, கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார, நகர, கிராம கமிட்டியின் அனைத்துநிலை முன்னாள், இன்னாள் நிா்வாகிகள், துணை அமைப்புத் தலைவா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

