~ ~

திருச்செந்தூரில் இடைவிடாது மழை

திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
Published on

திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீா் தேங்கியதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனா்.

சாத்தான்குளம்... சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடா்ந்து சாரலுடன் பரவலான மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com