தூத்துக்குடி
வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு
ஏரல் அருகே உள்ள சிவகளையில் மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
சிவகளை பரும்பு பகுதியைச் சோ்ந்தவா் பலவேசம் (80). விவசாயி.வீட்டின் ஒரு பக்க சுவா் சனிக்கிழமை, இடிந்து இவா் மீது விழுந்ததாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஏரல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
