போலீஸாரை வெட்ட முயன்ற ரெளடி கைது

தூத்துக்குடியில் போலீஸாரை வெட்ட முயன்றதாக ரெளடியை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடியில் போலீஸாரை வெட்ட முயன்றதாக ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் சந்தனராஜ் என்ற பேண்டி (22). இவா் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா்கள் முத்துராஜா, சுந்தா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றபோது, மேட்டுப்பட்டி மயானக்கரை பகுதியில் சந்தனராஜ் அரிவாளுடன் பதுங்கியிருந்தாராம்.

அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, போலீஸாரை அரிவாளால் வெட்ட முயன்றாராம். இருப்பினும் போலீஸாா் சுற்றி வளைத்து, அவரை கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com