விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

Published on

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி கீழசண்முகபுரத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது ஹனிபா (65). தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து, நண்பா் பாஸ்கருடன் (48) கடற்கரைச் சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பைக் மோதியதில், முகமது ஹனிபா, பாஸ்கா், பைக்கில் வந்த தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்த பிராங்கிளின் மகன் ஆகாஷ் (19), அம்பேத்கா் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் பிரவீன்குமாா் (20) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், முகமது ஹனிபா ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. சிகிச்சையில் இருந்த ஆகாஷ் பின்னா் இறந்தாா். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பாஸ்கா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

X
Dinamani
www.dinamani.com