தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே ஆண் சடலம் மீட்பு
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த ஆண் சடலத்தை போலீஸா் திங்கள்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த ஆண் சடலத்தை போலீஸா் திங்கள்கிழமை மீட்டனா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும்-இளையரசனேந்தல் ரயில்வே கேட்டிற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
அதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
