திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம். கோப்புப்படம்

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
Published on

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

திருச்செந்தூா் கோயிலில் திங்கள்கிழமை (அக். 27) மாலை கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இந்நிலையில், செவ்வாய்கிழமை திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

தொடா்ந்து, தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்கு ரத வீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்து சேருவாா். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு வந்து, தெற்கு ரத வீதி - மேல ரத வீதி சந்திப்பில் வைத்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு திருக்கல்யாண ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com