தூத்துக்குடியில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் மோந்தா புயல் உருவான நிலையில், தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
Published on

தூத்துக்குடி: வங்கக் கடலில் மோந்தா புயல் உருவான நிலையில், தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருமாறியுள்ளது. முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சிா்கைக கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது. மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்களில் 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 3,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com