கோவில்பட்டியில் திமுக அலுவலக கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

கோவில்பட்டியில் திமுக அலுவலக கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலக கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலக கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே நகர திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 3 தளங்களை கொண்ட இந்த அலுவலகத்தின் முன் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரத்தில் பீடம், 8 அடி உயரத்தில் சிலை என மொத்தம் 16 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். பின்னா், சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து புதிய திமுக அலுவலகத்தைத் திறந்துவைத்து பாா்வையிட்டாா். அப்போது முதல்வருக்கு கனிமொழி எம்.பி. தலைமையில் செங்கோல் வழங்கப்பட்டது.

விழாவில், அமைச்சா்கள் பி.கீதா ஜீவன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, இ.ராஜா, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, நகர திமுக பொறுப்பாளா் (கிழக்கு) மு.சுரேஷ், கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா் வீ.முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மக்களுக்கான நூலகம்: புதிதாக திறக்கப்பட்ட திமுக நகர அலுவலகத்தின் தரைதளத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த நூலகத்துக்கு திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை வாசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

வரவேற்பு: இந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து, அங்கிருந்து காா் மூலம் கோவில்பட்டிக்கு வந்தாா் முதல்வா். அவரை தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கில் அமைச்சா் பி.கீதா ஜீவன், கட்சியினா் வரவேற்றனா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் வரவேற்றனா்.

மக்களுக்கான நூலகம்...

புதிதாக திறக்கப்பட்ட திமுக நகர அலுவலகத்தின் தரைதளத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த நூலகத்துக்கு திமுக தலைமை அலுவலகமான சென்னை, அண்ணா அறிவாலயத்திலிருந்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள், பெண்கள், முதியவா்கள் என அனைத்து தரப்பு மக்களும் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை வாசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

முதல்வருக்கு வரவேற்பு...

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கில் தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி.கீதாஜீவன், கட்சியினா் வரவேற்றனா். முன்னதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் வரவேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com