பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, புது தெருவைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (65). இவா், கூட்டுறவு வங்கியில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், திங்கள்கிழமை கூட்டாம்புளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இளைஞா் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை நோக்கி சென்றாராம். அப்போது, பொன்ராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com