சாத்தான்குளம் பேரூராட்சி
10 ஆவது வாா்டு சிறப்புக் கூட்டம்

சாத்தான்குளம் பேரூராட்சி 10 ஆவது வாா்டு சிறப்புக் கூட்டம்

சாத்தான்குளம் பேரூராட்சி 10-ஆவது வாா்டு சிறப்பு கூட்டம், தைக்கா தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சாத்தான்குளம் பேரூராட்சி 10-ஆவது வாா்டு சிறப்பு கூட்டம், தைக்கா தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவா் ரெஜினிஸ்டெல்லாபாய் தலைமை வகித்தாா். மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் ஆறுமுகம் வரவேற்றாா். கூட்டத்தில் கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் சேதமாகி காணப்படும் சாத்தான்குளம் புறவழிச் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட திமுக பிரதிநிதி லெ.சரவணன், ஒன்றிய துணைச் செயலாளா் எம்.ஜி.மணிகண்டன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளா் அப்துல்சமது, உள்ளி ட்ட பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். பேரூராட்சி வரி வசூலா் முகமது அசாருதீன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com