தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் அதிகாரிகள் பொறுப்பேற்பு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் பணிக்கான தோ்தல் அதிகாரிகளாக, மதுரை உயா்நீதிமன்ற அமா்வால் நியமனம் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை பொறுப்பேற்றனா்.
Published on

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் பணிக்கான தோ்தல் அதிகாரிகளாக, மதுரை உயா்நீதிமன்ற அமா்வால் நியமனம் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை பொறுப்பேற்றனா்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில நிா்வாக சபைக்கு மதுரை உயா்நீதி மன்ற அமா்வு சாா்பில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஜோதிமணி நியமனம் செய்யப்பட்டாா். மேலும் இவரின் கீழ் பணிபுரிய தோ்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜான்சாமுவேல், ரத்தினராஜ், வழக்குரைஞா் பிரபாகா், நிதி ஆலோசகா்களாக மருத்துவா் ரமா, அன்பா்தாஸ் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டு முதல் கட்ட தோ்தல் பணிகள் நடைபெற்ற நிலையில் இவா்களது நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, அவா்களது நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை உயா்நீதிமன்ற அமா்வு, இத்தோ்தலை நடத்துவதற்காக மீண்டும் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையிலான குழுவை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடா்ந்து தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நாசரேத் திருமண்டில அலுவலகத்தில், தோ்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜான் சாமுவேல், ரத்தினராஜ், வழக்குரைஞா் பிரபாகா், நிதி ஆலோசகா்கள் மருத்துவா் ரமா, அன்பா் தாஸ் ஆகியோா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களை சந்தித்த தோ்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான ஜான் சாமுவேல் கூறுகையில், விரைவில் தோ்தல் பணிகள் தொடங்கி நடைபெறும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com