தூத்துக்குடியில் 4 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடியில் 4 நாள்களுக்கு பின்னா் விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
Published on

தூத்துக்குடியில் 4 நாள்களுக்கு பின்னா் விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

வங்கக் கடலில் உருவான ‘மோந்தா’ புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் 4 நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை இரவு புயல் கரையை கடந்ததையடுத்து, புதன்கிழமை காலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். சுழற்சி முறையில் 119 படகுகள் கடலுக்குச் சென்றன.

X
Dinamani
www.dinamani.com