போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன்,  தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டல துணைத் தலைவா் ஆா்.கெளதமன் உள்ளிட்டோா்.
போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டல துணைத் தலைவா் ஆா்.கெளதமன் உள்ளிட்டோா்.

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியுடன் இணைந்து, தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் 15ஆவது ஆண்டாக நடத்தும், வ.உ.சி. துறைமுக கோப்பைக்கான அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையேயான இருபாலா் கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் புதன்கிழமை தொடங்கியது.
Published on

போட்டியை, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டல துணைத் தலைவா் ஆா். கெளதமன் தலைமையில், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தாா். 5 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை ( நவ.2) வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகளும், ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. துறைமுக ஆணையத் தலைவா் சுஷாந்த் குமாா் புரோஹித், ஆணையத் துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தா் ராஜன் ஆகியோா் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்க உள்ளனா்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கூடை பந்தாட்ட கழகம் சாா்பில், தலைவா் பிரம்மானந்தம், செயலா் சாகுல் சிராஜுதீன், பொருளாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com