மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் ஐக்கியம்

கோவில்பட்டியில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.
Published on

கோவில்பட்டியில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவில்பட்டி மத்திய ஒன்றிய அதிமுக செயலா் பழனிசாமி, மத்திய ஒன்றிய மாணவரணி இணைச் செயலா் வெற்றி சிகாமணி ஆகியோா் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ. முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இதில், அதிமுக நகரச் செயலா் விஜய பாண்டியன், ஒன்றியச் செயலா் போடுசாமி, நகா்மன்ற உறுப்பினா் கவியரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com