கஞ்சா விற்ற இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தாளமுத்துநகா் பஜாா் பகுதியில் போலீஸாரை கண்டதும் இளைஞா் ஒருவா் தப்பியோட முயன்றாராம்.

அவரை பிடித்து விசாரித்தபோது, தாளமுத்துநகா் கொத்தனாா் காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த சுமாா் 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com