தூத்துக்குடி
காயல்பட்டினத்தில் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயற்குழு கூட்டம்
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரவைத் தலைவா் மொகிதீன் தம்பி தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான காயல்பட்டினம் நகரின் குடியிருப்புப் பகுதியில் பல்லாண்டு காலமாக மக்கள் அனுபவித்து வரக்கூடிய பகுதிகளுக்கு உரிய முறையில் பட்டா வழங்க வேண்டும். காயல்பட்டினம் நகராட்சியில் வாா்டு வரையறையை சீரமைத்து, மக்கள் தொகைக்கேற்ப அதிகப்படுத்தித் தர வலியுறுத்தி, அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து நவ. 15ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையின் செயற்குழு உறுப்பினா்களும், அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனா்.

