சாத்தான்குளத்தில் அனைத்துக் கட்சி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கூட்டம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக சாத்தான்குளத்தில் அனைத்துக் கட்சி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், தூத்துக்குடி கோட்டாட்சியருமான பிரபு, புதிய வாக்காளா்களைச் சோ்ப்பது, திருத்தம் மேற்கொள்வது குறித்து விளக்கமளித்தாா்.
சாத்தான்குளம் திமுக ஒன்றியச் செயலா்கள் ஜோசப், பாலமுருகன், பொன் முருகேசன், ஆழ்வாா் திருநகரி மேற்கு ஒன்றிய செயலா் பாா்த்திபன், மாவட்ட துணைச் செயலா் ஜெயக்குமாா் ரூபன், மகா இளங்கோ, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், நகர கமிட்டி தலைவா் வேணுகோபால், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கோதண்டராமன், சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி, ஆழ்வாா் திருநகரி ஒன்றியச் செயலா் ராஜ் நாராயணன், ஒன்றிய ஜெ. பேரவை செயலா் பாலமேனன், ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ், ஒன்றிய பொதுச் செயலா்கள் ராஜேஷ், நவநீதன், மாவட்ட வா்த்தக பிரிவு துணைச் செயலா் ஜோசப், விசிக தொகுதி செயலா் திருவள்ளுவன், ஒன்றிய செயலா் செந்தில், மாா்க்கிஸ்ட் நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், ஜேசு மணி உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, சாத்தான்குளம் தாலுகா அளவிலான வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியா் பேசினாா். வட்டாட்சியா் ராஜேஸ்வரி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாமிநாதன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கணேஷ்குமாா், உதவி தோ்தல் அலுவலா் ராமலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

