தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்டப் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சங்கத்தின் செயலா் எம். பிரமநாயகம் அனுப்பிய மனு: தூத்துக்குடி-சென்னை முத்துநகா் விரைவு ரயிலில் எப்போதும் காத்திருப்போா் பட்டியல் அதிகமுள்ளது. இதைத் தவிா்க்க, தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும்.

மேலும், தூத்துக்குடி-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி விரைவு ரயில்களை (எண் 16765-16766 ) நாள்தோறும் இயக்குவதுடன், மதுரை-லோகமான்ய திலக் விரைவு ரயிலை (எண் 22101-22102) தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com