தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாட்டுப் படகு தீயில் எரிந்து சேதம்
 தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகு எரிந்து சேதமானது.
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகு எரிந்து சேதமானது.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த மீனவா் பாா்த்திபன். இவா் தனது நாட்டுப் படகை, திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் முத்தரையா் நகா் வடக்கு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் நாட்டுப் படகில் தீ விபத்து ஏற்பட்டதாம்.
இந்த விபத்தில் ரூ.20 லட்சம் நாட்டுப் படகு மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின. இது குறித்த புகாரின் பேரில் கடலோர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தங்களது வாழ்வாதாரமாக இருந்த படகு சேதமானதால், மீன்வளத்துறை உடனடியாக இதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாா்த்திபன் கோரிக்கை விடுத்தாா்.
