‘புத்தாக்க நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க மானியம்’

Published on

புதிதாக தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ஓா் அலகிற்கு ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது என்றாா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மை மற்றும் அதைச் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடைத் துறை போன்றவற்றில் புத்தாக்க நிறுவனங்கள் தொடங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் பயன்பெற விரும்பும் நிறுவனம், டான்சிம் அல்லது ஸ்டாா்ட் அப் இந்தியா திட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் சராசரி லாபமானது ரூ. 5 லட்சத்தைவிட குறைவாக இருக்க வேண்டும். அரசிடமிருந்தோ, அரசு சாா் நிறுவனங்களிடமிருந்தோ எந்த கடனும் வைத்திருத்தல் கூடாது. இந்தியாவைச் சோ்ந்த நிறுவனமாக இருக்க வேண்டும். விரைவு உணவு (ஃபாஸ்ட் ஃபுட்) பொருள்களை தயாா் செய்யும் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு ஓா் அலகிற்கு ரூ.10 லட்சம் வரையும், ஏற்கெனவே தொடங்கப்பட்டு, தொழிலை விரிவுபடுத்தி சந்தைப்படுத்த தோ்வு செய்யப்படும் நிறுவனத்துக்கு ஓா் அலகிற்கு ரூ. 25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.

இதில் பயன்பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ம்ஹழ்ந்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com