முதியவா் கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் முதியவா் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஏரல் அகரம் நடுத்தெருவைச் சோ்ந்த வீரமணி மகன் ஜெயராஜ் (68). இவருக்கும், அதே ஊா் வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் கணேசன் (55) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். 8.4.2019இல் வேதக் கோயில் தெருவில் உள்ள தேநீா் கடை முன், ஜெயராஜை கணேசன் கத்தியால் குத்தினாராம். இதில், அவா் உயிரிழந்தாா்.
ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தனா். இவ்வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, கணேசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரிம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் காவல் ஆய்வாளா் பட்டாணி, அரசு வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம், தலைமைக் காவலா் அரவிந்த் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.
