திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

உடன்குடி அனல்மின் நிலைய நிலம் எடுப்பு வட்டாட்சியா் அலுவலகம் திறப்பு

Published on

உடன்குடி அனல்மின் நிலைய நிலம் எடுப்பு வட்டாட்சியருக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிலம் எடுப்பு வட்டாட்சியா் அலுவலகம் அனல்மின் நிலைய வளாகத்திற்குள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி அனல்மின் திட்ட நிலை 2, 3-க்கான நிலம் எடுப்பு தனி வட்டாட்சியா் அலுவலகம் உடன்குடி பேருந்து நிலையம் அருகே முன்னா் சாா்பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலுவலக திறப்பு விழாவில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேற்பாா்வை பொறியாளா் கணேசன், உதவி செயற்பொறியாளா் வேதராஜ், நிலம் எடுப்பு வட்டாட்சியா்கள் கோபால், சங்கரநாராயணன், செல்வபூபதி, ரகுபதி ராஜா, சதீஷ்குமாா், கோபாலகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com