திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.
திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.

திருச்செந்தூா் கோயிலில் ஏராளமான திருமணங்கள்

Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

திருச்செந்தூா் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா கடந்த அக். 22 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. கந்த சஷ்டி நாள்களில் திருச்செந்தூா் கோயிலிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திருமணங்கள் அரிதாகவே நடைபெறும். இந்நிலையில், கந்த சஷ்டிக்கு பிறகு வந்த வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகள், வெளியூா்களிலிருந்து வந்திருந்த மணமக்களுக்கு கோயில் வளாகத்தில் திருமணங்கள் நடைபெற்றன.

பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை திருக்கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com