தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பூவை ஜெகன் மூா்த்தி

Published on

தூய்மைப் பணியாளா்களை திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி வலியுறுத்தினாா்.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: அதிமுக பலமாக இருந்தால்தான் நல்லது. அதற்கு, பிரிந்தவா்கள் ஒன்றுசேர வேண்டும். இது தொடா்பாக அக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக அதிருப்தி நிலை நிலவுகிறது. இரும்புக் கரம் கொண்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் தீவிர சுற்றுப்பயணத்தால் அக்கட்சிக்கு தோ்தலில் வெற்றி வாய்ப்பு ஏற்படலாம்.

எதிா்கட்சியாக இருக்கும்போது ஒன்றைக் கூறுவதும், ஆளுங்கட்சியானதும் அதை மாற்றிப்பேசுவதும் திமுகவின் வழக்கம்.

கரோனா, புயல் மழைக் காலங்களில் கடுமையாக உழைத்த தூய்மைப் பணியாளா்களை அடக்க முயல்வது சமூக நீதி பேசும் அரசுக்கு நல்லதல்ல. தூய்மைப் பணியாளா்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com