ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 77.01 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 77,01,696 ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 2:24 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 77,01,696 ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

வியாழக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 77,01,696 ரொக்கம், ரூ.5,05,477 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ.72,18,146 ஆகும் எனக் கூறியுள்ளாா்.