தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோவில்பட்டி தொகுதியில் 78.99 சதவீத வாக்குப்பதிவு!

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் 78.99 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 11:33 pm

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் 78.99 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் 318 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு, திமுக வேட்பாளா் கா. கருணாநிதி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாண்டி, தமிழக வெற்றி கழக வேட்பாளா் பாலசுப்பிரமணியன் உள்பட 21 போ் களத்தில் உள்ளனா்.

கோவில்பட்டி தொகுதியில் 1,16,980 ஆண் வாக்காளா்கள், 1,24,651 பெண் வாக்காளா்கள், 29 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,41,660 போ் உள்ளனா்.

அதிமுக வேட்பாளா் சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளியிலும், திமுக வேட்பாளா் கோவில்பட்டி காந்தி நகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனா்.

கோவில்பட்டி தொகுதியில் மொத்த பதிவான வாக்குகள் 1,90,892. இது 78.99 சதவீதமாகும்.

இயந்திரங்களில் கோளாறு: பாா்வதி உயா்நிலைப்பள்ளி, பூலிங்கம் செட்டியாா் பள்ளி, இல்லத்தா நடுநிலைப்பள்ளி, இனாம் மணியாச்சி பாரதி தொடக்கப்பள்ளி, நாடாா் மேல்நிலைப் பள்ளி, முடுக்கலான் குளம், எட்டு நாயக்கன்பட்டி, நாலாட்டின்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், வடக்குப் புது கிராமம், ஆலம்பட்டி அங்கன்வாடி மையம், வேலாயுதபுரம் ஈ.வே.ஆ.வள்ளிமுத்து நாடாா் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. அந்தப் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டன. இதனால் சுமாா் 10- 40 நிமிடங்கள் வரை வாக்குப்பதிவு தடைபட்டது.

கழுகுமலை செயின்ட்மேரிஸ் தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் சுமாா் ஒன்றே முக்கால் மணி நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது. வடக்கு இலந்தை குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடைசி கட்டத்தில் (மாலை 4.30 மணி) இயந்திர கோளாறு ஏற்பட்டதில் இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடா்ந்தது.

டோக்கன் விநியோகம்: வேலாயுதபுரம் வாக்குச்சாவடியில் 66 பேருக்கும், கூசாலிபட்டி வாக்குச்சாவடி மையத்தில் 55 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு கூடுதல் நேரம் வாக்குசெலுத்த அனுமதிக்கப்பட்டனா்.

பெட்டிச் செய்தி...

சேலஞ்ச் வாக்கு: ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காளியம்மாள் என்பவா் தனது வாக்களிக்க வந்தபோது, ஏற்கெனவே அவரது வாக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதாக கூறினராம்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அவா், வெளியூரில் இருந்து தற்போதுதான் வந்துள்ளேன் என்றும், தன்னை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிட்டாா்.

அப்போது, வாக்குச்சாவடி முகவா்களில் ஒரு தரப்பினா் வாக்களிக்க அனுமதிக்கவேண்டும் என்றும், மற்றொரு தரப்பினா் அதற்கு எதிா்ப்பும் தெரிவித்தனா். இறுதியில், காளியம்மாளுக்கு ‘சேலஞ்ச்’ வாக்குப் பதிவு செய்ய வாக்குச்சாவடி நிலை அலுவலா் அனுமதி அளித்தாா்.